பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருதநகரில்  ஈ.வி.விருதநகரில்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவபொம்மை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து திங்கள்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:28 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து திங்கள்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வரை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முகமதுநயினார் தலைமை வகித்தார். இதில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவபொம்மையையும் எரித்தனர்.

இதில், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மூக்கையா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், விருதுநகர் அரசு மண்டல போக்குவரத்துக் கழகம் முன்பு அண்ணா தொழிற் சங்கத்தினரும் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர்: சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி தலைமை வகித்தார். இதில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரது உருவப்பொம்மையும் எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி இணைச்செயலாளர் முனீஸ்வரன், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.